அதிக மழை பெய்யும் என வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
அதிக மழை எச்சரிக்கை மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிகமிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 261 பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
சார்ஆட்சியர், கோட்டாட்சியர்கள் தலைமையில் மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பேரிடர் சமயங்களில் பணியாற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
இதுதவிர அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள தரைவழி தொலைபேசி மற்றும் கட்செவி அஞ்சலுடன்கூடிய செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தேவையான பணிகளைச் செய்து தண்ணீரை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் ஏற்கெனவே 13 இடங்களில் மழைமானி உள்ள நிலையில் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்கவும், டெங்கு உள்ளிட்ட நோய்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்.6, 7) விடுமுறையை பொருள்படுத்தாமல் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பணி செய்ய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது,, மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
21 ஆயிரம் மணல் மூட்டைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 125 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்நிலை மீட்பாளர்களாக 913 ஆண்களும், 400 பெண்களும் என மொத்தம் 1313 பேர் நியமிக்கப்பட்டுள்ளநர். 7 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மழைநீரை அப்புறப்படுத்த ஏதுவாக 44 மோட்டார்களும், 124 பொக்லைன் இயந்திரங்களும், 2 ஹிட்டாச்சி இயந்திரங்களும், 21 ஆயிரத்து 485 மணல் மூட்டைகளும், 41 ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகளுக்காக பிரத்யேக பயிற்சி பெற்ற 77 காவலர்கள், 160 தீயணைப்பு வீரர்கள், 160 நீச்சல் வீரர்கள், 40 மீனவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ராதாபுரம், திசையன்விளை வட்டங்களில் கடலோர கிராமங்கள் உள்ளதால் அங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்செவி அஞ்சலில் புகார் அளிக்க வாய்ப்பு
மழை பாதிப்பு தொடர்பாக தொலைபேசி வாயிலாகவும், கட்செவி அஞ்சல் மூலமும் புகார்களை தெரிவிக்க எண்கள் வட்டங்கள்தோறும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0462 2501070, 2501012 (கட்செவி அஞ்சல் செல்லிடப்பேசி எண்-63740 01902, 6374013254), திருநெல்வேலி-0462-2333169 (9894306884), மானூர்-0462-2485100 (8270775749), பாளையங்கோட்டை-0462-2501469 (6374009290), சங்கரன்கோவில்-04636-226455 (8056450670), திருவேங்கடம்-04636-264400 (7708089198), தென்காசி-04633-222262 (8667480205), செங்கோட்டை-04633-233276 (9489526788), கடையநல்லூர் 04633-245666 (7305676757), ஆலங்குளம்-04633-271384 (7598173976), வி.கே.புதூர்- 04633-277140 (7398173976), சிவகிரி 04636-250223 (9790452342), சேரன்மகாதேவி 04634-260007 (6381472736), அம்பாசமுத்திரம் 04634-250348 (9443416041), நான்குனேரி- 04635-250123 (9787084853), ராதாபுரம்- 04637- 254122 (9443581690), திசையன்விளை-04637-271001 (8015450649).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

