பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

"ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு, செவுள்வலை படகுகள் கட்டுவதற்கு 50 சதவீத மானியம்'

மீனவர்களுக்கு ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 9:56 am IST

மீனவர்களுக்கு ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும்,  ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும்,  தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகை கட்ட படகொன்றிற்காகும் செலவில் 50  சதவீதம் மானியம் (அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை) மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும். 
தமிழகத்தைச் சேர்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத்துறையின் இணையதளத்தில் (‌w‌w‌w.‌f‌i‌s‌h‌e‌r‌i‌e‌s.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n) இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் அலுவலக வேலை நாள்களில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறை இயக்குநர்,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள்,  3-ஆவது தளம்,  கால்நடை மருத்துவமனை வளாகம்,  571,  அண்ணா சாலை,  நந்தனம்,  சென்னை-600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பலாம். 
விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி படகின் வரைபடத்தை தகுதிவாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக இணைக்கப்பட வேண்டும். 
பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு அனுப்பப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ராதாபுரத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.