நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஜெயலலிதா பிறந்த தினம்: அதிமுக கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:52 am IST

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து உணவு வழங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன், வழக்குரைஞர் ஜெனி, பகுதிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு,  தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி 48 ஆவது வார்டில் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.