குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாளை.யில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வு: 110 பேர் பங்கேற்பு

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வில் 110 பேர் பங்கேற்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:57 am IST

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வில் 110 பேர் பங்கேற்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, திருநெல்வேலி டான் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை சார்பில் இலவச மாதிரித் தேர்வு பாளையங்கோட்டை பிபிஎல் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வை ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
விஞ்ஞானம் பாடத்தில் 110 வினாக்களும், நடப்பு பொது அறிவுப் பிரிவில் 40 வினாக்களும், புத்திக்கூர்மை பிரிவில் 50 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண் பெற்ற 8 பேருக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர் கலாதேவி பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை, சுழற்கழக நிர்வாகி ஜானகிராம் அந்தோனி, நல்நூலகர் அ.முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.