ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

ஆழ்வார்குறிச்சி சிவசைலநாத சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழான

ஆழ்வார் குறிச்சி  பரமகல்யாணி அம்பாள் உடனாய சிவசைலநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.  

Updated On :23 ஜனவரி 2019, 7:49 am IST

ஆழ்வார் குறிச்சி  பரமகல்யாணி அம்பாள் உடனாய சிவசைலநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.  
இக்கோயிலில்  தெப்ப உற்சவம் கடந்த 13 ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது.  ஜன. 20இல் சிவசைலத்திலிருந்து சுவாமி- அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினர். திங்கள்கிழமை (ஜன. 21) காலை விளா பூஜை, அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. சுவாமி- அம்பாள் கேடயத்தில் விநாயகர் கோயிலில் இருந்து தருமபுரம் ஆதீனமடத்துக்கு எழுந்தருளினார். அங்கு  உச்சிகால பூஜை, மாலை சாயராட்சை பூஜை முடிவடைந்து சுவாமி- அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
சுவாமி- அம்பாள் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் திருக்குளம் வீதி வலம் வந்து பெரிய தளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தனர். பின்னர், செவ்வாய்க் கிழமை அதிகாலை சுவாமி- அம்பாள் ரிஷபவாகனத்தில் வீதி உலா வந்து 2 சிவாச்சார்யார்கள் வைதீக கோலத்து டன் இரட்டை சோடஷ தீபாராதனையும், அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளி அபிஷேக தீபாராதனையும் நடைபெற்றன.  இதையடுத்து நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ஆழ்வார்குறிச்சி காவல்உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் சத்ய சீலன், ஆய்வாளர் முருகன்,  செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன்  மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ஊர் மக்கள் செய்திருந்தனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.