புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பால நாகம்மன் கோயிலில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மாலை 6 மணிக்கு முப்பெருந்தேவி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகமும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டரில் சிறப்பு பாலபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து முப்பெருந்தேவியருக்கு சிறப்பு அலங்காரமும்,பெரிய தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, பாடல்கள் பாடி வழிபட்டனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


