முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்

Updated On :24 ஜனவரி 2019, 2:50 am IST

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா பாளையங்கோட்டையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் நேதாஜியின் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தென்னங்கன்று ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அரசு சார்பில் நேதாஜி சிலை அமைக்க வேண்டும்;  நேதாஜியின் பிறந்த தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலர் முத்துப்பாண்டியன், தொண்டரணிச் செயலர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் யாபேஸ் பாண்டியன்,  பகுதிச் செயலர் குமார் பாண்டியன், பகுதி இளைஞரணித் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
பாளையங்கோட்டை: 
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில்  நேதாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து,  இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காக்கும் உறுதிமொழியேற்கப்பட்டது. 
நிகச்சிக்கு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு நிர்வாகி அ.பீட்டர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொது நலசங்கத்தை சேர்ந்த பால் அண்ணாத்துரை, டேனியல், சீனிவாசன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.