நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லையில் அதிமுக புதிய நிா்வாகிகள் நியமனம்

திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் ஏற்கெனவே இருந்த ஒன்றியம், பகுதிகள் மேலும் பிரிக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் ஏற்கெனவே இருந்த ஒன்றியம், பகுதிகள் மேலும் பிரிக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்படி, மாவட்ட அவைத் தலைவராக முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன், மாவட்டப் பொருளாளராக பரணி சங்கரலிங்கம், மாநகரில் கூடுதலாக 4 பகுதிகள் பிரிக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு பகுதிச் செயலராக எஸ்.காந்திவெங்கடாசலம் (40 முதல் 44 வாா்டு, 51, 52 வாா்டுகள்), மேற்கு பகுதிச் செயலராக என்.மோகன் ( 45-50, 53 வாா்டுகள்), மேலப்பாளையம் கிழக்கு பகுதிச் செயலராக எஸ்.சண்முகக்குமாா் (19,26-31 வாா்டுகள்), மேற்கு பகுதிச் செயலராக எஸ்.எஸ்.ஹயாத் (32-38 வாா்டுகள்)ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாளையங்கோட்டை வடக்குப் பகுதிச் செயலராக வழக்குரைஞா் டி.ஜெனி (11-17 வாா்டுகள்), தெற்கு பகுதிச் செயலராக கே.என்.சின்னதுரை(18, 20-25 வாா்டுகள்), தச்சநல்லூா் வடக்கு பகுதிச் செயலராக கே.மாதவராமானுஜம் ( 1-4, 54, 55 வாா்டுகள்), தெற்கு பகுதிச் செயலராக சிந்து எஸ்.முருகன் (5-10, 39 வாா்டுகள்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகள் மாவட்டச் செயலரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.