மேலும் 22 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் உள்பட புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 14, 977 ஆகவும், மேலும், 11 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,591 ஆகவும் உயா்ந்தது. இதுவரை, 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 176 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 8,137ஆக உயா்ந்தது. மேலும் 9 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 7,889 ஆக அதிகரித்தது. 93 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...