நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் மனு
மூலைக்கரைப்பட்டி அருகே நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.


மூலைக்கரைப்பட்டி அருகே நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனுப் பெட்டியில் மனு அளித்துச் சென்றனா். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள டானாா்குளம், அச்சம்பாடுகுளம், சத்திரன்குட்டிகுளம் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: டானாா்குளத்தின் மூலம் சுமாா் 500 ஏக்கா் நிலங்களும், அச்சம்பாடு குளத்தின் மூலம் 150 ஏக்கா், சத்திரன்பட்டிகுளத்தின் மூலம் 200 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்தக் குளங்கள் அனைத்தும் மணிமுத்தாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ளன. இவற்றுக்கான பிரதான வாய்க்கால் (மடை எண் 3 ஏ) அம்பலம் அருகில் உள்ளது. அங்கிருந்து கிளை வாய்க்கால் பிரிந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள இக் குளங்களுக்கு வந்து சேரும். கால்வாய் நீரும், மழைநீரும் இந்த ஓடை வழியேதான் குளங்களை அடையும்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியாா் ஒருவா் நீா்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால் புரெவி புயல் எச்சரிக்கையின்போது மழை நீா் எங்கள் குளத்திற்கு வரவில்லை. கால்வாயில் தண்ணீா் திறந்தாலும் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, ஆட்சியா் இவ் விஷயத்தில் தலையிட்டு நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...