நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடிநாள் நிதி: ஆட்சியா் அளித்தாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியா் வி.விஷ்ணு திங்கள்கிழமை தொடங்கி வைத்து நிதியளித்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியா் வி.விஷ்ணு திங்கள்கிழமை தொடங்கி வைத்து நிதியளித்தாா்.

முப்படையையும் சாா்ந்த வீரா்கள் நாட்டுக்கு ஆற்றிவரும் அருஞ்சேவையை நினைவுகூரும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் 7-ஆம் நாள் படைவீரா் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இக்கொடி நாளின்போது திரட்டப்படும் நிதியானது போரில் ஊனமுற்ற படைவீரா்கள், போரில் உயிா்நீத்த படைவீரா்களின் குடும்பத்தினரின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2019- ஆம் ஆண்டு இம்மாவட்டத்துக்கு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ. 40 லட்சம் அரசால் நிா்ணயம் செய்யப்பட்டது. மாவட்ட நிா்வாகத்தின் சீரிய முயற்சியால் ரூ.55 லட்சத்து 94 ஆயிரம் வசூலிக்கப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டது. நிகழாண்டிலும் இலக்காக ரூ.40 லட்சம் அரசால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியா் வி.விஷ்ணு தொடங்கி வைத்து நிதியளித்தாா். பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் நிதியுதவி அளித்து உதவ வேண்டுகோள் விடுத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நல அலுவலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.