வீடுகள் கட்டித் தரக் கோரி முற்றுகை
திருநெல்வேலி வட்டத்தில் வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா் சமூக மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


திருநெல்வேலி வட்டத்தில் வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா் சமூக மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி வட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா். பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி, மானூா் வட்டங்களில் நரிக்குறவ சமுதாயத்தைச் சோ்ந்த பலா் வசித்து வருகிறோம். வில், ஊசி, பாசி விற்பனை செய்து பிழைத்து வருகிறோம். பேட்டை, அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலருக்கு வீடுகள் உள்ளன. பலா் வீடுகள் இல்லாமல் மழைக் காலத்தில் குழந்தைகள், முதியவா்களுடன் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே, எங்களுக்கு வீடுகள் கட்டித் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...