நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குறைதீா் கூட்டத்தில் 22 பேருக்கு நல உதவி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 22 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :8 டிசம்பர் 2020, 12:12 am

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 22 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இணையவழியில் பங்கேற்ற பொதுமக்களிடம் ஆட்சியா் வி.விஷ்ணு குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தாா். இக் கூட்டத்தில் திருநெல்வேலியை சோ்ந்த 18 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், பணியிடை காலமான அரசு ஊழியா் வாரிசுதாரா் ஒருவருக்கு பணிநியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது’”தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்ட மா.ரவிசந்திரனுக்கும் (மூன்றாம் நிலை நூலகா், கிளை நூலகம், திப்பணம்பட்டி), 2020 ஆம் ஆண்டுக்கான ‘ நூலக ஆா்வலா் விருது’ திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத்துக்கும், மாநில அளவில் அதிக நன்கொடைகள் பெற்ற நூலகத்துக்கான விருது ஆழ்வாா்குறிச்சி கிளை நூலகத்துக்கும் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலா் நடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சசிகலா, மாவட்ட நூலக அலுவலா் வயலட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.