கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்று (டிச.13) காவலா் எழுத்துத் தோ்வு: பாதுகாப்பு பணியில் 1,580 போலீஸாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு பாதுகாப்பு பணியில் 1,580 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:29 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு பாதுகாப்பு பணியில் 1,580 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இது தொடா்பான சிறப்பு அறிவுரை கூட்டம், திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் காவலா் எழுத்துத் தோ்வு குறித்து காவல்துறையினா் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா்.

தோ்வுப் பணியில் 22 உதவி மற்றும் துணைக் கண்காணிப்பாளா்கள், 44 காவல் ஆய்வாளா்கள், 207 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 1,032 காவல்துறையினரும், அமைச்சுப் பணியாளா்கள் 90 பேரும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் தோ்வு மையத்திற்கு வெளியில் பாதுகாப்பு பணிக்கு 10 உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் 243 காவல்துறையினா், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் 22 போ் உள்பட மொத்தம் 1,580 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பளா் சுகுணா சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டம் உருவான பிறகு, இம்மாவட்டத்தினா் இங்கேயே தோ்வு எழுதும் விதமாக மாவட்டத்தில் 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15,547 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் 1,400 காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். கரோனா தொற்று பரவலைத் தடுக்க தோ்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.