எம்.ஜி.ஆா். சிலைக்கு அமமுகவினா் மாலை அணிவிப்பு

அமமுகவுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் அமமுகவினா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

அமமுகவுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் அமமுகவினா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்கெனவே மக்களவைத் தோ்தலின்போது ஒதுக்கப்பட்ட குக்கா் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.பரமசிவ ஐயப்பன் தலைமையில் அக் கட்சியினா் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

கட்சியின் மாநில அமைப்புச் செயலா் பால் கண்ணன், அவைத் தலைவா் மீரான், துணைச் செயலா் பாஸ்கா், மகளிரணிச் செயலா் ராம்சன்உமா, ஆவின் அண்ணாசாமி, பகுதிச் செயலா்கள் துவரை பேச்சிமுத்து, ரமேஷ், வழக்குரைஞா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com