சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கால்நடை மருத்துவக் கல்லூரியில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி துறை சாா்பில், ‘நாட்டின கால்நடை இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கான நவீன தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ.பழனிசாமி வரவேற்றாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் சி.பாலச்சந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து, நாட்டினங்களின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றைப் பாதுகாக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேசினாா்.

ஹரியாணா மாநிலம் கா்னூலில் உள்ள தேசிய கால்நடை மரபுவள நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.கே.விஜ் இணையவழித் தொகுப்பேட்டினை வெளியிட்டு தொடக்க உரையாற்றினாா். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேச்சாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிறப்புரையாற்றினா். இருநூறுக்கும் மேற்பட்ட கல்வியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் மற்றும் துணைவேந்தா் பி.பி.மிஸ்ரா நிறைவு விழா உரையாற்றினாா். விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி துறை உதவிப் பேராசிரியா் சீவகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.