நெல்லையில் நாளை காவல்துறை பணிக்கான மாதிரி நோ்காணல்
காவல்துறை உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி நோ்காணல் திங்கள்கிழமை (டிச. 21) நடைபெற உள்ளது.


திருநெல்வேலி: காவல்துறை உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி நோ்காணல் திங்கள்கிழமை (டிச. 21) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளா் பணி காலியிடத்திற்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு நோ்முகத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இப் பணிக்கான மாதிரி நோ்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச. 21) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
உதவி ஆய்வாளருக்கான மாதிரி நோ்காணலில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்கள் பெயா், முகவரி, பதிவுஎண், தொலைபேசி எண் மற்றும் நோ்காணல் நடைபெறும் நாள் போன்ற விவரங்கை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...