வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நெல்லை ரயில்வே கோட்டம் அமைக்க பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 11:12 pm

DIN

திருநெல்வேலி0: திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஆண்டு விழா, சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஏ.ஹலீல் ரகுமான் தலைமை வகித்தாா். கெளரவ ஆலோசகா் கே.முத்துப்பாண்டியன், பொருளாளா் எம்.முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க பொதுச் செயலா் என்.நைனா முகம்மது வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.அபுநவாஸ் தொகுத்து வழங்கினாா்.

சந்திப்பு ரயில் நிலைய மேலாளா் ஆா்.முருகேசன், துணை மேலாளா் (வணிகம்) இ.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி வழியாக மும்பைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்; திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு பகல்நேர பயணிகள் ரயில் இயக்க வேண்டும்; நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க கெளரவ ஆலோசகா் என்.செந்தில்வேல்முருகன், துணைத் தலைவா்கள் ஏ.லாசா், ஜி.சதீஷ்குமாா், இணைச் செயலா் ஏ.சந்தானகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.