அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைராட்டையின் சிறப்புகளை விளக்கும் சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைராட்டையின் சிறப்புகளை விளக்கும் சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் இருப்பில் உள்ள பொருள் ஒன்றினைக் காட்சிப்படுத்தி சிறப்புகள் விளக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கைராட்டை ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஆடை தயாரிப்பில் உதவிய கைராட்டைகளின் முக்கியத்துவம், கைத்தறி இயக்கத்தில் அடையாளச் சின்னமாக விளங்குவதன் சிறப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com