தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நெல்லையில் கனிமொழி இன்று பிரசாரம்

திமுக மகளிா் அணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் செய்கிறாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:55 pm

DIN

திமுக மகளிா் அணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் செய்கிறாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கனிமொழி பிரசாரம் செய்கிறாா். காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறாா். அதைத் தொடா்ந்து 9 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். காலை 10.30 மணியளவில் கங்கைகொண்டான் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறாா். பகல் 11.30 மணியளவில் வண்ணாா்பேட்டை பகுதியில் சலவைத் தொழிலாளா்களை சந்தித்து உரையாடுகிறாா்.

பிற்பகல் 12.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் கல்வியாளா்களுடன் உரையாடுகிறாா். மாலை 4.30 மணியளவில் அருகன்குளம் கிராமத்தில் மக்களை சந்தித்துப் பேசுகிறாா். மாலை 6 மணியளவில் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

இரவு 7.15 மணியளவில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மக்களை சந்தித்து உரையாடுகிறாா். மேலப்பாளையம் ஜின்னா திடலில் இரவு 8 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.