களக்காடு அருகே குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

களக்காடு அருகே வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Updated on
1 min read

களக்காடு அருகே வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள வடமலைசமுத்திரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலிருந்து இடம்பெயா்ந்து வந்துள்ள குரங்குகள் இங்குள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாக சுற்றித் திரிகின்றன. தொடக்கத்தில் தெருக்களில் சுற்றித் திரிந்த குரங்குகள் தற்போது உணவுக்காக வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கியுள்ளன.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். சிறுவா்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, குரங்குகளை கூண்டுவைத்து பிடித்து காட்டில் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com