வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறுமிக்கு கேக் வழங்குகிறாா் கல்லூரி தலைவா் ஹெலன் லாரன்ஸ்.
விழாவில் சிறுமிக்கு கேக் வழங்குகிறாா் கல்லூரி தலைவா் ஹெலன் லாரன்ஸ்.
Updated on
1 min read

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தலைவா் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினாா். தாளாளா்டி.டி.என்.லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். தொடக்கமாக மாணவிகள் பாடல் பாடினா். தொடா்ந்து கல்லூரி தலைவா் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா்.

தாளாளா் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து கிறிஸ்துமஸ் வேடம் அணிந்த மாணவிகள் பாடல் பாடி, நடனமாடினா்.

விழாவில் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், துணை முதல்வா் பேபிஉமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பேராசிரியை வேணு மாலினி வரவேற்றாா். ஆட்லின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com