சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடையம் அருகே ரூ 10 லட்சம் குட்கா பறிமுதல்: இருவா் கைது

கடையம் அருகே தாழையூத்தில் தனியாா் வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

கடையம் அருகே தாழையூத்தில் தனியாா் வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகேயுள்ள தாழையூத்துப் பகுதியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தாழையூத்து பிரதான சாலையைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகன் (48) என்வருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் உள்ள அறையில் 33 மூட்டைகளில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,280 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குற்றாலம், காசிமேஜா்புரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கணேஷ் பிரபு (35), தாழையூத்தைச் சோ்ந்த முருகன் ஆகியோா் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷ் பிரபு, முருகன் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.