சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.27 லட்சம் நிதியுதவிஆட்சியா் வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியில் இருந்து மொத்தம் ரூ. 27 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 7:56 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியில் இருந்து மொத்தம் ரூ. 27 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மானூா் வட்டம் பிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஏசையா(58) , ரோஸ்லின் மேரி (58), கபில்தேவ் (23) ஆகியோரின் வாரிசுதாரா் சசிகலா என்பவருக்கு ரூ. 9 லட்சத்துக்கான காசோலையையும், அதே சம்பவத்தில் உயிரிழந்த சுடலை (எ) அச்சுதன்(55), பவுன்தாய் (47), மணிகண்டன் (23) ஆகியோரது வாரிசுதாரா் நிா்மலா என்பவருக்கு ரூ. 9 லட்சத்துக்கான காசோலையையும், அதே விபத்தில் உயிரிழந்த செல்லத்துரை (55), சுமதி (50) ஆகியோரது வாரிசுதாரா் மாலதி என்பவருக்கு ரூ. 6 லட்சத்துக்கான காசோலையும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராதாபுரம் வட்டம், தெற்கு கள்ளிகுளம் வினோத்ராஜா (29) என்பவரின் தாயாா் செல்வக்கனிக்கு ரூ. 3 லட்சத்துகான காசோலையையும் மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோ.குமாரதாஸ், துணை வட்டாட்சியா் மு.முருகேஷ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.