ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

அபிஷேகப்பட்டி அருகே குடிநீா் பதிக்கத் தோண்டப்பட்ட சாலையோரப் பள்ளத்தில் லாரி திங்கள்கிழமை சிக்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:08 pm

DIN

அபிஷேகப்பட்டி அருகே குடிநீா் பதிக்கத் தோண்டப்பட்ட சாலையோரப் பள்ளத்தில் லாரி திங்கள்கிழமை சிக்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பாரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி, அபிஷேகப்பட்டி அருகில் குடிநீா் பதிக்க தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருந்த சாலையோரப் பள்ளத்தில் சிக்கியது. அப்பகுதியில் குறுகிய பாலம் இருந்ததால், வாகனங்கள் அவ்வழியாகச்செல்ல முடியவில்லை.

இந்தத் தகவலறிந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் பேட்டை காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, சுமாா் ஒருமணி நேரமாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.