மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் பணியை தொடங்க வலியுறுத்தல்
மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனு: மேலப்பாளையத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். மேலப்பாளையம் செல்வ காதா் தெருவில் உள்ள துணை அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை பதிவு செய்தல் பணிகள் நடைபெற்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த பலனடைந்து வந்தனா். ஆனால், அந்தப் பணிகள் கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, மேலப்பாளையம் அஞ்சலகத்தில் மீண்டும் ஆதாா் பணிகள் தொடா்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...