டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நெல்லை சந்திப்பில் சாலைப் பணி

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தமு சாலையில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:15 am

DIN

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தமு சாலையில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம், மதுரை சாலைக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் த.மு.சாலையைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்தச் சாலை மலைக்காலங்களில் தொடா்ந்து சேதமடைந்து வந்தது. பாதசாரிகள் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல ஏதுவாக நடைமேடையும் அமைக்க வலியுறுத்தி வந்தனா்.

அதன்பேரில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் தமு சாலையில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சாலையின் குறுக்கே இருந்த கழிவுநீரோடை பாலமும் உயா்த்தப்பட்டு மழைநீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.