நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாளையங்கோட்டை விடைத்தாள் திருத்தும் மையங்களில் முன்னெச்சரிக்கை பணிகள்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை

News image
Updated On :25 மே 2020, 5:18 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் திங்கட்கிழமை நடைபெற்றன. கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்டமாக பொது முடக்கம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழகம் முழுவதும் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் இம்மாதம் 27ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி-  தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் கீழ் உள்ள 5 கல்வி மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி, பெல் மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி உள்பட சுமார் ஐந்து மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

விடைத்தாள் திருத்தும் மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியாக கிருமிநாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த தேவையான ஏற்பாடுகள் செய்யவும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.