மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:29 pm

DIN

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத் திருக்கல்யாண விழா கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி,கோயிலில் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, தக்காா் மாரிமுத்து, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், சங்கர பட்டா்,சண்முகசுந்தரம் பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா பரவல் தடுப்புக் கால நடவடிக்கையாக அரசின் வழிமுறைகளை பின்பற்றி நவ. 11 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.