இரட்டை கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடா்பான வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது


தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடா்பான வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருவேங்கடம் அருகேயுள்ள மைப்பாறையைச் சோ்ந்தவா் ஜெயராமன் (60)- தனலட்சுமி (50) தம்பதியின் மகன் கண்ணன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயியான முத்தல்ராஜ் (47) மகள் சிவராணியை காதலித்து திருமணம் செய்தாராம். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், கடந்த 21.3.2015இல் முத்தல்ராஜுக்கும், ஜெயராமனுக்கும் ஏற்பட்ட மோதலில் ஜெயராமன், தனலட்சுமி இருவரும் கம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்தனா். இதுதொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிந்து முத்தல்ராஜை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றஞ்சாட்டப்பட்ட முத்தல்ராஜுக்கு ஆயுள் சிைண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். போலீஸ் தரப்பில் வழக்குரைஞா் ராஜபிரபாகரன் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...