நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:26 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட ஏஆா்ஏஐ மற்றும் ஐசிஏடி போன்ற அமைப்புகளின் அனுமதியைப் பெற்றுள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தலாம் என்பதை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டைகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் வேணி பி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஏ.தங்கராஜன், எஸ்.ஆா்.வெங்கடாசலம், பி.வி.முருகபெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.