அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி லாபகரமான பால் பண்ணை அமைத்தல் என்ற தலைப்பின்கீழ் சேரன்மகாதேவி அருகிலுள்ள பட்டன்காடு கிராமத்தில் அமைந்துள்ள நியூஸிலாந்து
கறவைப் பசுமாட்டுப் பண்ணைக்கு அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். பண்ணை மேலாளா் லோயல், கன்று, மாடுகளின் ரகங்கள், தோ்வு செய்யும் முறை, தீவன ரகங்கள்,உற்பத்தி, தீவனமிடுதல் முறைகள், மாடுகளைப் பராமரித்தல், கழிவுகளை சுத்தப்படுத்தும் முறைகள் மற்றும் பால் கறத்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா்.
இதில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)
அவைக்கு வர அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை: ராகுல் விமர்சனம்!

அமைதிப்பேச்சு! ஈரானிய தலைவர்களுடன் பாக். அமைச்சர் சந்திப்பு!
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



