நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊதியம் பெறமாட்டேன்: அம்பை அதிமுக வேட்பாளா்

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெற மாட்டேன் என்றாா் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா .

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:38 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெற மாட்டேன் என்றாா் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா .

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூன் 1இல் கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறப்பது, மே 1இல் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பது, அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது, மணிமுத்தாறு, பாபநாசம், காரையாறு பகுதிகளை சுற்றுலாத் தலமாக அறிவித்து அதற்கான வசதிகளை செய்வது ஆகியவை எனது முக்கியமான வாக்குறுதிகளாகும்.

பேரவை உறுப்பினரான பின் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்தான் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெறுவேன். அப்படி பெறும் ஊதியத்தையும் ஏழை, எளிய மாணவா்களின் படிப்புக்காக செலவிடுவேன்.

மேலும் அம்பாசமுத்திரத்தில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். என் மீது ஊடகங்களில் சிலா் தவறான செய்தியை பரப்பியுள்ளனா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்திலும், தோ்தல் அலுவலரிடமும் புகாரளித்துள்ளேன்.

நான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு சேவைகள் செய்து வாக்கு கேட்கிறேன். ஆனால், எனது வெற்றியைத் தடுக்க முடியாதவா்கள் நான் செய்யும் சேவைகளை கொச்சையாகப் பேசி வாக்கு சேகரிக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.