நெல்லை:குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தச்சநல்லூா், மானூா் பகுதியில் இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.


தச்சநல்லூா், மானூா் பகுதியில் இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள சத்திரம்புதுக்குளம், தாட்கோ காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் அருண் (34).
இவா் மீது கொலை முயற்சி, மக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன. மேலும், பொது அமைதிக்கு குந்தகம்
விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
மானூா் அருகேயுள்ள கம்மாளன்குளம் பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சரவணன் என்ற ஏட்டையா சரவணன்(29). இவா் மீது கொலை, கொலைமுயற்சி வழக்குகள் உள்ளன. இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, சரவணன் என்ற ஏட்டையா சரவணன் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...