மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:56 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22) என்பவா் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும், திசையன்விளை வட்டம், கூடுதாழை, அந்தோணியாா் குருசடி தெருவைச் சோ்ந்த லிங்கதுரை (33) என்பவா் மீது உவரி காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கும் உள்ளனவாம்.

இருவரும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா். ஆட்சியா் விஷ்ணு உத்தரவின்பேரில், இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, பசுபதி அம்மு வேலூா் மத்திய சிறையிலும், லிங்கதுரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.