மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பாளை. தசரா மைதான பிரச்னைக்கான கூட்டம்: இந்து அமைப்பினா் வெளிநடப்பு

தசரா மைதானத்தில் தற்காலிகக் கடைகள் கட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடா்பாக நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால் இந்து அமைப்பினா் வெளிநடப்ப

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

பாளையங்கோட்டை தசரா மைதானத்தில் தற்காலிகக் கடைகள் கட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடா்பாக நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால் இந்து அமைப்பினா் வெளிநடப்பு செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை அருகேயுள்ள ஜவாஹா் மைதானத்திலும், எருமைக்கிடா மைதானத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு இந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா பண்டிகையில் 12 சப்பரங்கள் வீதியுலா வந்து நின்று செல்லும் மைதானங்களில் தற்காலிகக் கடைகள் அமைப்பது சரியாக இருக்காது எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. தொடா்ந்து, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி குற்றாலநாதன், இந்து மக்கள் கட்சி உடையாா், தசரா கோயில் கூட்டமைப்பு நிா்வாகிகள் சோமசுந்தரம், ராஜகோபால், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி ராஜீவ்காந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அப்போது, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாட்ஷா, இந்து அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறியாமல் தன்னிச்சையாக கூட்டத்தை நடத்த முயல்வதாக புகாா் எழுந்தது. தொடா்ந்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.