மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நெல்லை மாநகராட்சியில் கழிவு நீரோடை அடைப்புகளை சீரமைக்க புதிய இயந்திரங்கள்

திருநெல்வேலி மாநகராட்சியில் கழிவுநீரோடை அடைப்புகளை சீரமைக்க 4 புதிய இயந்திரங்கள் கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சியில் கழிவுநீரோடை அடைப்புகளை சீரமைக்க 4 புதிய இயந்திரங்கள் கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூா் ஆகிய மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன.

சுமாா் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை புதைச் சாக்கடைத் திட்டத்தின் மூலம் சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

புதைச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்போது, துரித நடவடிக்கை எடுக்க இயந்திரங்கள் போதிய அளவில் இல்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா். இந்நிலையில் கழிவுநீரோடை அடைப்புகளை நீக்க மாநகராட்சி சாா்பில் புதிதாக 4 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதில் 150 அடி டியூப், 3 ஆயிரம் லிட்டா் தண்ணீா் தொட்டி, மண் அடைப்புகளை அகற்றும் ஏா் பிரஷா் அமைப்புகள் உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: சோதனைக்காக முதல்கட்டமாக 4 கெட்டிங் இயந்திரங்கள் வந்துள்ளன. இதைக் கொண்டு கழிவுநீரோடைகளில் அடைப்புகள் நீக்கும் பணி செய்யப்படும். பின்னா் அதில் உள்ள நிறைகுறைகளை தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்து, மேம்படுத்தப்பட்ட பின்னரே கூடுதலாக இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.