பாதாள சாக்கடை பணி:வடக்கு ரதவீதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 16) முதல் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 16) முதல் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டு பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி நகரம் வடக்கு ரத வீதியில் வரும் 16-ஆம் தேதி முதல் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும், அது முடிந்தவுடன் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அதே சாலையில் சிமென்ட் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, திங்கள்கிழமை முதல் இரண்டு மாதங்களுக்கு வடக்கு ரத வீதியில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் செல்ல முடியாது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...