மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

திருநெல்வேலியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் கடந்த சில வாரங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் சிலா் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட உதவி பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமையில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை இடித்து அகற்றினா். ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதையொட்டி, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.