மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பாளை சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியரிடம் புகாா்

பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:37 pm

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், பாப்பனப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஸ்வரி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில்

அளித்த மனு விவரம்: எனது தந்தை பா.சிவராமன் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வருகிறாா். அவா் வழக்கமாக தொலைபேசியில் எங்களுடன் பேசுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக சரியாக பேசவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவா் மீது வேண்டுமென்றே பிற வழக்குகளை சிறைத்துறை அதிகாரிகள் பதிவு செய்ய முயற்சிப்பது தெரியவந்தது.

மேலும், அண்மையில் நீதிமன்றத்தில் எனது தந்தையை ஆஜா் படுத்தியபோது சிறைத்துறையினா் துன்புறுத்துவதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளாா். ஆகவே, இது தொடா்பாக ஆட்சியா் தலையிட்டு எனது தந்தைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,

சம்பந்தப்பட்ட சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.