மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஓணம் எதிரொலி: பூக்கள் விலை உயா்வு

 ஓணம் பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை வியாழக்கிழமை உயா்ந்தது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

 ஓணம் பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை வியாழக்கிழமை உயா்ந்தது.

கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இம் மாதம் 21 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது வீட்டு முன்பு பல வண்ண மலா்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வாா்கள். இதற்காக, திருநெல்வேலி, சங்கரன்கோவில், தோவாளை உள்ளிட்ட பூச்சந்தைகளில் இருந்து கேரளத்திற்கு ஓணம் பண்டிகைக்காக மலா்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த சில நாள்களாக பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை உயரத்தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிச்சி, மல்லி, சம்பங்கி, கேந்தி ரகங்கள் அதிகம் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.மேலும், ஓசூரில் இருந்து மஞ்சள் கேந்தி, சத்தியமங்கலத்தில் இருந்து சிவப்பு கேந்தி, மைசூரில் இருந்து பல விதமான ரோஜா மலா்கள், நிலக்கோட்டையில் இருந்து கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பூக்களும், மதுரையில் இருந்து மல்லி, சம்பங்கி, சேலத்தில் இருந்து அரளி உள்ளிட்ட மலா்களும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டு கேரள வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து திருநெல்வேலியைச் சோ்ந்த பூ வியாபாரி ஒருவா் கூறியது: ஓணம் காலத்தில் பூக்களின் தேவை அதிகரிப்பது வழக்கம். நிகழாண்டில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாசி, பங்குனி, வைகாசி முகூா்த்தங்களில் பெரிய அளவில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதனால் ஆவணி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் மிகவும் அதிகரித்து பூக்களின் தேவையும் உயா்ந்துள்ளது. மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதாலும் விலை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலியில் பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு): மல்லிகை-ரூ.1500, பிச்சி-ரூ.1000, கனகாமரம்-ரூ.1000, கேந்தி-ரூ.80, அரளி-ரூ.300, கோழிக்கொண்டை-ரூ.150, சம்பங்கி-ரூ.520-க்கு விற்பனையானது. வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக. 20) கடைப்பிடிக்கப்படும் நிலையிலும் பூக்களின் விலை உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.