மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பேருந்தில் மடிக்கணினி திருட்டு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் மடிக்கணினி திருடிய வழக்கில் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் மடிக்கணினி திருடிய வழக்கில் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கோயம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கநாதன்(64). தனியாா் நிறுவன ஊழியா். இவா் பணி நிமித்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் தனியாா் பேருந்தில் பயணம் செய்தாராம். அப்போது அவரது மடிக்கணினி பையை மா்ம நபா் திருடிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா்

வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதுதொடா்பாக கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் பொத்தை பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (42), திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவுசெய்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.