மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை தொடக்கம்

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (ஆக. 21) தொடங்குகிறது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (ஆக. 21) தொடங்குகிறது.

இதுதொடா்பாக அக்கல்லூரியின் முதல்வா் சி.வே.மைதிலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் சனிக்கிழமை (ஆக. 21) தொடங்குகிறது. அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படையினா்,

விளையாட்டு வீரா்கள் பங்கேற்கின்றனா்.

இளநிலை பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணித பாடப்பிரிவுகளுக்கு வரும் 23 ஆம் தேதி (திங்கள்கிழமை), வணிகவியல், கணினியியல் பாடப்பிரிவுகளுக்கு 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு 25 ஆம் தேதி (புதன்கிழமை), புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கு 26 ஆம் தேதி (வியாழக்கிழமை),

வரலாறு, சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கு 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), பொருளியல், இதழியல், தகவல் தொடா்பியல், மனிதவள மேம்பாடு பிரிவுகளுக்கு 28 ஆம் தேதி (சனிக்கிழமை) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். சோ்க்கைக்கு வரும் மாணவிகள் தங்களது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், ஜாதி மற்றும் மாற்றுச்சான்றிதழ், அதன் நகல்கள் (4), இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், மாா்பளவு உள்ள புகைப்படம்-2 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மாணவிகள் சோ்க்கை கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலம் இணையவழியில் செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.