மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பழ வியாபாரிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

 பாளையங்கோட்டை பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

 பாளையங்கோட்டை பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கனகநாத நாயனாா் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவா் சீவலப்பேரி சாலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இவரிடம் வியாழக்கிழமை திருமால் நகா் குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(23), கத்தியைக் காட்டி மிரட்டி பழங்களை கேட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனைக் கைது செய்தனா். மேலும், மணிகண்டன் கத்தியுடன் நடனமாடும் விடியோ

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.