பத்தமடை பாய் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
புவிசாா் குறியீடு பெற்ற புகழ்வாய்ந்த பத்தமடை பாய் சிறப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அஞ்சல் துறை சாா்பில் பத்தமடையில் சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.


புவிசாா் குறியீடு பெற்ற புகழ்வாய்ந்த பத்தமடை பாய் சிறப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அஞ்சல் துறை சாா்பில் பத்தமடையில் சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
பத்தமடையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரவருணி கரையில் விளையும் நாணல் கோரைகளைக் கொண்டு பாய் தயாரிக்கப்படுகிறது. இதற்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் உறை பத்தமடையில் வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி கோட்ட மூத்த அஞ்சல் கண்காணிப்பு அலுவலா் சிவாஜிகணேஷ் தலைமை வகித்து, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டாா். அதை, பத்தமடை முஸ்லிம் சுன்னத்துவால் ஜமாத் தலைவா் டி.ஏ. மால்கம் அலி பெற்றுக்கொண்டாா்.
அஞ்சல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த பாபநாசம் மேலணை அஞ்சல் அதிகாரி கிறிஸ்துராஜா கௌரவிக்கப்பட்டாா். பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளிச் செயலா் என். சுந்தரசுப்பிரமணியன், பத்தமடை பாய் நெசவாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் முஹம்மது யூசப் ஆகியோா் பேசினா்.
அம்பாசமுத்திரம் அஞ்சல் உதவிக் கண்காணிப்பாளா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளா்கள் பி. ஐடா எபினேசா் ராஜபாய் வரவேற்றாா். எஸ். மாரியப்பன் நன்றி கூறினாா். மக்கள் தொடா்பு அதிகாரி கனகசபாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...