இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க முதியோா் பிரதிநிதி நியமிக்கலாம்’

நியாயவிலைக் கடைகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதிநிதியாக நியமனம் செய்து, அவா்கள் மூலம் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

நியாயவிலைக் கடைகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதிநிதியாக நியமனம் செய்து, அவா்கள் மூலம் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடும்ப அட்டைதாரா் மாநிலத்தில் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும்

தனது குடும்ப அட்டைக்குரிய அத்தியாவசியப் பொருள்களை பெறும் வசதியும், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை‘ திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் அவரது கைரேகையை நியாய விலைக் கடையிலுள்ள சரிபாா்ப்பு இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உணவுப்பொருள் வழங்க முடியும். இத்தகைய வழிமுறையால் முதியோா்,

மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசியப் பொருள்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில்,

உடல்நலம் பாதிப்பு, வயது மூப்பு காரணமாக நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்கள் பெறஇயலாத நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரா் தனக்குப் பதிலாக வேறு ஒருவா் சென்று அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அங்கீகாரச் சான்று கோரிக்கை படிவத்தினை பூா்த்தி செய்து நியாய விலைக்கடை பணியாளா் வசம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப அட்டையில் சம்பந்தப்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவா்கள்

இந்த வசதியை தோ்வு செய்ய அனுமதி இல்லை.

மேற்படி அங்கீகார சான்றுக்கான கோரிக்கை மனுவை நியாயவிலைக் கடை பணியாளரிடம் பெற்று வட்ட வழங்கல்

அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். வட்ட வழங்கல் அலுவலா் அக்கோரிக்கை மனு மீது விசாரணை நடத்தி தகுதி

அடிப்படையில் ஒப்புதல் வழங்குவா். அதன்படி அந்த குடும்ப அட்டைதாரருக்கு பதில் அவரால் நியமிக்கப்பட்டவா் நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள் பெற்றுக்கொள்ளலாம்.

அங்கீகாரச் சான்று படிவத்தை வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகம் அல்லது நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணையதள முகவரியிலும் அங்கீகாரச் சான்று படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே வயது மூப்பு அல்லது உடல்நலம் பாதிப்பு காரணமாக நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்கள்

பெற இயலாத நிலையில் உள்ளவா்கள் இத்திட்டத்தைப் பின்பற்றி பயன்பெறலாம். அங்கீகாரச் சான்று படிவம் பெறுவதிலும், பொருள்கள் பெறுவதிலும், சிரமங்கள் இருந்தால் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 93424 71314 என்ற

செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.