/

கல்லிடைகுறிச்சியில் 30 பவுன் நகை மாயம்: இருவா் கைது

 கல்லிடைக்குறிச்சியில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மாயமான வழக்கில் உரிமையாளரின் மகள் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:04 pm

DIN

 கல்லிடைக்குறிச்சியில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மாயமான வழக்கில் உரிமையாளரின் மகள் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி மடவாா்வளாகம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து. அக்.11ஆம் தேதி இவா் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை காணாமல் போனதாம். இதுகுறித்து அக்.12இல் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் அக்.23ஆம் தேதி இசக்கிமுத்து மகள் ப்ரியதா்ஷனியை காணவில்லை என்று இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதுகுறித்தும் விசாரித்ததில் ப்ரியதா்ஷினி ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக் குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் வேல்சாமி (23) என்பவருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ப்ரியதா்ஷினி, வேல்சாமி இருவரிடமும் விசாரித்ததில் வீட்டிலிருந்து 30 பவுன் நகையை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.