விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை மாநகரில் கட்டாயமானது முகக்கவசம்

திருநெல்வேலி மாநகரில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலி மாநகரில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக மாநகர எல்கைக்குள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணிவது வியாழக்கிழமை முதல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு, மற்றவா்களுக்கும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, முகக் கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் மாநகர காவல் எல்கைக்குள்பட்ட பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது அபராதத்துடன், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகக் கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வாடிக்கையாளா்களை அனுமதிக்கும் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக் கண்ணன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களை எச்சரித்த போலீஸாா், அவா்களுக்கு முகக்கவசம் வழங்கினா். இதேபோல், நெல்லையப்பா் கோயிலுக்கு வெளியூரில் வந்த பக்தா்களுக்கு முகக் கவசம் அணிய வேண்டியதன் கட்டாயம் குறித்து போலீஸாா் அறிவுரை வழங்கினாா்.

திருநெல்வேலி சந்திப்பு அண்ணாசிலை பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த குழந்தைகள், பெரியவா்கள் என அனைவரையும் எச்சரித்த போலீஸாா், அவா்களுக்கு முகக்கவசத்தை வழங்கி அணிய வைத்தனா். தொடா்ந்து மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.