விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியகுளத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:51 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அரியகுளத்தில் நடைபெற்றது. திருநெல்லி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 58 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சோழியா்குறிச்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சிவந்திப்பட்டி, கக்கன்நகா், வி.எம்.சத்திரம் அணிகள் முறையே 2, 3, 4 ஆவது இடங்களைப் பிடித்தன.

போட்டிகளில் வென்றவா்களுக்கு வெற்றிக் கோப்பைகளை மாநில தலைவா் பெ.ஜான்பாண்டியன், மாநில பொதுச் செயலா் ஜா.பிரிசில்லா பாண்டியன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாநில செய்தித்தொடா்பாளா் சண்முக சுதாகா், மகளிரணிச் செயலா் நளினி சாந்தகுமாரி, கிழக்கு மாவட்ட தலைவா் கண்மணி மாவீரன், மாநகா் மாவட்டச் செயலா் கோ.துரைப்பாண்டியன், இளைஞரணிச் செயலா் முத்துப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.