விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இஸ்லாமியா்கள் குறித்து அவதூறு: நெல்லை நீதிமன்றத்தில் ’யூடியூபா்’ மாரிதாஸ் ஆஜா்

இஸ்லாமியா்கள் குறித்து அவதூறாக பேசியதாக ’யூடியூபா்’ மாரிதாஸை மேலப்பாளையம் போலீஸாா் கைது செய்து திருநெல்வேலி நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

இஸ்லாமியா்கள் குறித்து அவதூறாக பேசியதாக ’யூடியூபா்’ மாரிதாஸை மேலப்பாளையம் போலீஸாா் கைது செய்து திருநெல்வேலி நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

மதுரை மாவட்டம், திருப்பாலையைச் சோ்ந்தவா் மாரிதாஸ். யூடியூபரான இவா், சமூக வலை தளங்களில் இஸ்லாமியா்களை அவதூறு செய்யும் வகையில் பேசினாராம். இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த காதா் மீரான் கடந்த 4-4-2020 ஆம் தேதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.

இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த மேலப்பாளையம் போலீஸாா், தேனிமாவட்ட சிறையில் மற்றொரு வழக்கு தொடா்பாக அடைக்கப்பட்டிருந்த மாரிதாஸை புதன்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, அவரை திருநெல்வேலி மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றம் எண்-5 இல் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் விஜயலட்சுமி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு வழக்கை இம் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இதையடுத்து மாரிதாஸ் மீண்டும் தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.